Sunday, November 30, 2008

475. பயங்கரவாதத்தின் இன்னொரு முகம் காட்டும் இணைய போலிகள்-by கி அ அ அனானி


மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து கடல் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியது தெரிந்ததே.மும்பை நகருக்குள் நுழையுமுன் கடலில் 5 மீனவர்களைக் கொன்றும் அராஜகம் நிகழ்த்தியுள்ளனர். மும்பையில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து வர்த்தகக் கப்பலில் மும்பை வந்துள்ளனர். வழியில் கடலில் சென்று கொண்டிருந்த "குபேர் " என்ற மீன்பிடி படகைக் கைப்பற்றி அதிலிருந்த 5 பேரில் 4 பேரை கொன்றுள்ளனர் . மீதமிருந்த ஒரு மீனவரை மும்பை கடற்கரையை நெருங்கும் சமயம் தலையைத் துண்டித்துக் கொடூரமாக கொன்றுள்ளனர். இவை அனைத்தையும் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் அமீன் கமால் விசாரணையின் போது கக்கியுள்ளான்.

மேலும் இந்தத் பயங்கரவாதி நாய்கள் மும்பை கடலோரப் பகுதியை நெருங்கும் போது கடற்படையினர் சிலர் பார்த்துள்ளனர்। அவர்களிடம் மாட்டி விடுவோமோ என்ற பயத்தில் குபேர் மீன்பிடி படகில் கிடைத்த, இந்து மதத்தினர் கையில் அணியும் சிவப்புக் கயிறை சிலரும் குங்குமத்தை சிலரும் அணிந்துள்ளனர்। ஆனால் அவர்கள் பயந்த படி கடற்படையினர் அவர்களை விசாரிக்காததால் திட்டமிட்ட படி தங்கள் இலக்கை அடைந்து தாக்குதலை நடத்தியுள்ளனர்।

உண்மை இப்படி இருக்க சில அன்னிய நாட்டு அடிவருடி நாய்கள், இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு துணை போகும் கயவர்கள் வந்தவர்கள் இந்துக்களாக இருக்கலாம் என்று திட்டமிட்டு செய்தி பரப்பத் தொடங்கியிருப்பது அதிர்ச்சியும் அருவருப்பும் உண்டாக்குகிறது। இதற்கு தமிழ் முதலான பல மொழி இணைய தளங்களில் உலா வரும் , மத வெறிக்காக தேசத்தையும்/இந்திய தேசியத்தையும் கா(கூ)ட்டிக் குடுக்கத் துணிந்த , சில புல்லுருவி நாய்களும் அடக்கம் என்பது மிகவும் வெட்க கரமானது, கேவலமானது, அவலமானாது। அதுவுமல்லாது இந்தப் புல்லுருவிகள் தமிழ் இணையத்தில் தமிழர்களின் ஆதரவு பெற தங்கள் இணைய பக்கங்களின் பெயர்களிலும் தங்களது இணைய புனைப் பெயர்களிலும் தமிழ், தமிழன் என்று இணத்துக் கொண்டு , தாங்களும் போலியாக சிவப்புக் கயிறணிந்து , குங்குமம் வைத்துக் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு சற்றும் சளைக்காத பயங்கரவியாதிகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.

நேரடியாக ஆயுதங்களுடன் புகுந்து தாக்கிய பயங்கரவாதிகளை 3 நாட்களில் (183 + 14) உயிர்களைப் பலி கொடுத்தாவது அழித்து விட்டோம்। ஆனால் மறைமுகமாக இந்திய இறையாண்மைக்கு உலை வைக்கும், அதன் அடிப்படையையே கலகலக்க வைக்கும் இந்தப் போலிகளை என்ன பூச்சிக்கொல்லி கொண்டு அழிப்பது என்ற ஆதங்கம் மேலிடுகிறது। ஒரு வேளை இதுதான் ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் அதிகபட்ச விலையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

நேர்மையிலும் நியாயத்திலும் நம்பிக்கை கொண்ட இந்திய இசுலாமியர்கள் இது போன்ற கீழ்த்தரமான புல்லுருவிகளை இனம் கண்டு ஒதுக்குவதன் மூலமும், அருவருக்கத்தக்க இந்த ஜந்துக்களை வெளிப்படையாய் அடையாளம் காட்டி எதிர்க்க முன்வருவதன் மூலமும் மட்டுமே இந்திய ஜனநாயக நாட்டில் மத நல்லிணக்கம் தழைக்க முடியும்। மேலும் இது போன்ற பயங்கரவாதங்களும் , மதக்கலவரங்களும் அதன் மூலம் ஆதாயம் தேட முயலும் அரசியல் நாடகங்களும் அரங்கேறுவதைத் தடுக்க முடியும்.


இந்தியராய் ஒன்று படுவோம் । இந்த நாட்டைக் காப்போம்.


By கி அ அ அனானி

29 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

said...

நெத்தியடி பதிவு.

ஆனால் என்ன சொன்னாலும் திருந்தாது இந்த நாய்கள்

said...

Someone in Chicago asked me the similarities between India and pakistan.

I replied that they both were strongly "IT" driven economies.

Information Technology as opposed to Islamic Terrorism.

Sriram

said...

தமிழ்மண மகுடத்தில் இந்த வகைப் பதிவு்தான் இருக்கிறது. வாசகர் பரிந்துரையிலும் இவ்வகைப் பதிவுகளே அதிகமும் உள்ளன. கொடுமை.

எதை வேண்டுமனாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்றாலும், கொஞ்சம் மனசாட்சியுடன் எழுதினால் நல்லது. திருந்துவார்களா?

said...

"Moonjoor" is spitting poison and some **** carriers are doing tht.

யு.எஸ்.தமிழன் said...

பாலா -

உங்களின் இந்த கோபம் மிகவும் அவசியமான ஒன்று. இந்திய மக்கள் பலரின் கோபமுமாக இதைப் பார்க்கிறேன். இதற்கு மேலும் செக்கூலரிஸ்ம் பேசி தீவிரவாதிகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருப்பதைக் காட்டிலும் நாட்டை வெள்ளைக்காரனுக்கே எழுதிவைத்து விடலாம். அவனாவது தன் பிரஜைகளை இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலைக்கு ஆட்படுத்தியிருக்க மாட்டான். இதை 9/11 போலவோ லண்டண் குண்டு வெடிப்புடனோ சம்பந்தப்படுத்தக்கூடாது - அவை வெறுமனே தீவிரவாததாக்குதல். இங்கு நடந்தது போர் - நம் நாட்டிற்குள் புகுந்து நம் மக்களை மந்தைகளைப்போல சுட்டு பீதி ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதற்குமேலும் இந்திய அமைச்சரகம் பேச்சுவார்த்தை பிச்சை நாடகங்களை நடத்திக்கொண்டிருக்குமானால், அவர்களின் தொழிலை மாற்றிக்கொள்ளுதல் நலம். அவர்களின் தற்போதிய தகுதியின் அடிப்படையில் கூட்டிக்கொடுக்கும் தொழில் ஒன்றுதான் அவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்!

.:d:.

said...

இதுல இப்ப கம்யூனிஸ்ட் அப்படீன்னு சொல்லிட்டு அலையுரவனுங்களும் காமெடி பண்ண ஆரமிச்சுட்டானுங்க. செகப்பு கயிறு கட்டி இருந்ததுனாலதான் அவனுங்க மும்பை வரைக்கும் தாராளமா வந்து சேந்தானுங்களாம். ஒரு சமூக விஞ்ஞானி எழுதுரான்.
ஏன் குத்தாது? தீவிரவதத்தை ஆரமிச்சு வச்சதே இவனுங்கதானே. இப்படியே பேசிக்கிட்டு அலையுங்கடா, ஆப்கானிஸ்தானத்துல இருந்தும் அல் கொய்தாகாரான் உன் வீட்டுக்கு வந்து உன் கு@#ல பாம் வச்சுட்டு போவான்.

said...

//தமிழ்மண மகுடத்தில் இந்த வகைப் பதிவு்தான் இருக்கிறது. வாசகர் பரிந்துரையிலும் இவ்வகைப் பதிவுகளே அதிகமும் உள்ளன. கொடுமை.///

அது ஒண்ணுமில்லை,இந்த கும்பலே ஒரு குருப்பா அலையுது. இவனுங்களுக்கு வேலையே இவனுங்க மொள்ளமாரித்தனத்தை தோலுரிக்கிற பதிவுக்கெல்லாம் ( - )குத்த வேண்டியது. (EDITED) ... பதிவுக்கெல்லாம் (+) குத்த வேண்டியது.இது ரொம்ப வருஷமா நடக்குறதுதான்.புதுசு ஒண்ணும் இல்லியே.

தருமி said...

:-((((

மாயவரத்தான் said...

Forgiving terrorists is left to God.

But fixing their appointment with God

is our responsibility.

- Indian National Army

said...

Bala,

Very nicely put.

You reflect the realisation of the common people.

said...

ஆஜ்மீர் தர்காவில்(ரஜஸ்தான்) குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது காவல் துறையினர் உடனே இது ஹூஜி அமைப்பினரின் கைங்கரியம் தான் என்று உறுதியாக கூறினார்கள். இதை உலகமே நம்பும் படி ஊடகங்களிலும் பரப்பப்பட்டது. அடுத்து.. மேலேகான் குண்டு வெடிப்பின் போதும் இதையே பல்லவியாக பாடினார்கள். நாமும் அப்போது நம்பினோம். ஹைதராபாத் மசூதிக்கருகில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே காரணம் என்று முதல் கட்ட விசாரணையிலே தீர்ப்பும் எழுதும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாண்டன.

ஆனால் இப்போது மூன்று குண்டுவெடிப்பும் துவங்கிய மய்யப்புள்ளி சங்பரிவாரம் தான் என்று விசாரணை வரும் நிலையில் அதனை நேர்மையாக நடத்திய அதிகாரி கொல்லப்படுகிறார். மேலேகன் விசாரணை தொடங்கும் வரையில் யாருக்கும் சந்தேகம் வராதபடி மோசாத்- தின் ஆலோசனைகளின் பேரில் நடத்தியது பரிவாரக்கும்பல் தான். அதற்கு இந்திய அரசில் எல்லா மட்டத்திலும் விசுவாசமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அடுத்து.. குஜராத்தில் தீவிரவாதியின் மூச்சுக்காற்றுக்கூட நுழைய முடியாது என்று மார்தட்டி சொன்ன மோடியின் ஆட்சியின் கீழ் இருக்கும் போர்பந்தரில் இருந்து தான் பயங்கரவாதிகள் பயணம் தொடங்கியுள்ளது. யார் ஆட்சி செய்தாலும் பயங்கரவாதத்தை வேறுடன் அறுக்க முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இப்போது பிடிப்பட்ட தீவிரவாதிக்கு அஜ்மல் என்று பெயரிட்டதே காவல்துறைதான். ஹேமந்த் கொலையை அவன் செய்ததாக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இத்திட்டம். தீவிரவாதிகளை வேட்டையாட செல்லும் முன் ஏ.டி.ஸ்-ஸின் தலைமை அதிகாரி கார்கரே தன் சகாவிடம் தனக்கு எதுவும் நேரலாம் என்றும் சங்பரிவாரத்தின் பல்வேறு நச்சுக்கைகள் தன்னை நெருக்கி வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார். தீவிரவாதிகள் சென்ற இடங்களிலெல்லாம் தடயங்களை விட்டு சென்றுள்ளனர். இதுவும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.

இந்தியாவில் உள்ள அதிகார்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் தொடர்பு இதற்கு இருக்கிறது. இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இதுவரை நடைப்பெற்ற குண்டு வெடிப்புகள் நிறைய உண்டு. எத்தனை உறுதி செய்யபட்டு தீர்ப்பு வழஙப்பட்டுள்ளது என்று கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இல்லை. அப்பாவிகள் தவிர. அப்சல் குருவின் தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதே குற்றம் உறுதி செய்யபடாதது தான். நீதிபதிகள் அவன் மீது தண்டனையை கொடுக்க இந்துக்களின் கூட்டு மனசாட்சியை துணைக்கு அழைத்திருப்பது அரசியல் சாசன அவமதிப்பு. இது இந்துதுவா நீதி துறையில் மேல்மட்டத்திலும் ஊடுருவியிருப்பது தெரிகிறது. கூட்டுமனசாட்சியின் படி பாபர் மசூதி இடிக்கப்பட்டது சரி என்றும் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வந்தால் ஆச்சரியமில்லை

Santhosh said...

சூப்பர் பதிவு பாலா... எங்க திருந்தனுமே.. ஆனா எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறாங்கப்பா..

//மாயவரத்தான்.... said...
Forgiving terrorists is left to God.

But fixing their appointment with God

is our responsibility.

- Indian National Army
//
ஹஹஹ.. ரசித்தேன் :))..

said...

///Anonymous said...
ஆஜ்மீர் தர்காவில்(ரஜஸ்தான்) குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது காவல் துறையினர் உடனே இது ஹூஜி அமைப்பினரின் கைங்கரியம் தான் என்று ///

மேற்கூறியுள்ள பின்னூட்டத்தை இட்டுள்ள அனானி, நன்றி.உங்களைப் போன்றவர்களை தோலுரிக்கும் இந்தப் பதிவின் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டீர்கள்.இதைப் போன்ற வாதங்களை தோலுரித்துக் காட்டவே இந்தப் பதிவு.

நான் சொல்வது கொஞ்சம் விஜயகாந்த் பாணியில் இருந்தாலும் உண்மை அதுதான்
இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கை 25042.
அதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 7000 க்கும் மேல்.
உங்க கணக்குப்படி 3 குண்டுவெடிப்புக்கு சங் பரிவார் காரணமுன்னு கண்டு புடுச்சிட்டீங்க.உங்க பெனிபிட்டுக்காக சம்ஜவ்தா வெடிகுண்டு சேத்து 4 நான் தற்றேன். ஆனாலும் இன்னும் 25039 குண்டு வெடிப்பு நடந்துருக்கு. போய் அதையும் ஆராய்ச்சி பண்ணி உங்க "கண்டுபிடிப்பை" உலகுக்கு குடுங்க.

அவனுங்களே அடங்குனாலும் நீங்க அடங்க மாட்டீங்களா? :(((

கி அ அ அனானி

யூர்கன் க்ருகியர் said...

தமிழ் வலைப்பதிவுகளில் குலைக்கும் இவர்கள் சாதா நாய்கள் இல்லை.வெறி பிடித்த நாய்கள். சுட்டுதான் கொல்லனும்.

said...

அவனுங்களே அடங்குனாலும் நீங்க அடங்க மாட்டீங்களா?//

மதவாத தீவிரவாத கோரமுகம் தெரியாத அறியாமையே

Rashmi said...

//ஆஜ்மீர் தர்காவில்(ரஜஸ்தான்) குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது காவல் துறையினர் உடனே இது ஹூஜி அமைப்பினரின் கைங்கரியம் தான் என்று....//

யாரப்பா இந்தாளு? இவருக்கு கிரீடம் தான் வெக்கணும். 1946ல் இந்திய முஸ்லீம் லீக் ஆரமிச்சு வெச்ச “Direct Action Day" தொட்டு 2008 மும்பை நிகழ்வுகள் வரை இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்களின் தொல்லை தாங்க முடியவில்லை. ஹேமந்த் இறந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான ஒன்று. ஆனால் அதற்காக அவர் ஒருவரை கொல்ல வேண்டி ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் இத்யாதி இத்யாதி எல்லாம் ரொம்பவும் அதிகம். இவர்களைப் போன்ற சிலர்தான் செக்யூலரிச வேடம் கட்டிக் கொண்டு அரசியல் செய்துவருகின்றனர். அப்படி உங்களுக்கு பாக்கிஸ்தான் உசத்தியான நாடு என்றால் அங்கே போய் குடியேற வேண்டியதுதானே. இங்கே வந்து இருக்கும் நல்ல முஸ்லீம்கள் பெயரையும் சேர்த்து கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள். இதற்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல் மஹாராஷ்டிர மாநில துணை முதல்வர் (உள்துறையும் இவர் வசமே); மும்பை போன்ற பெரிய நகரங்களில் இது போன்ற நிகழ்வுகள் எப்போதாவது நடப்பதுதான், அதை பெரிதுபடுத்தக் கூடாது என்னும் வகையில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். என்னே இவர்களின் தேசபக்த்தி!!! மெய்சிலிர்த்துப் போகிறேன் நான்.

-- வருதங்களுடன்
மதுசூதனன் ராமானுஜம்

அருண் said...

அற்புதமாக எழுதி உள்ளீர்கள். உங்கள் கோபம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வர வேண்டும்.

said...

ஸ்ரீராம்,வடகரை வேலன்,யு.எஸ்.தமிழன்,தருமி,மாயவரத்தான்,டியூ ட்ராப்,சந்தோஷ், ஜுர்கேன் க்ருகேர்,மத்சூதனன் ராமானுஜம்,அருண் மற்றும் அனானிகள் அனைவருக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

கி அ அ அனானி

சீனு said...

//இந்தப் புல்லுருவிகள் தமிழ் இணையத்தில் தமிழர்களின் ஆதரவு பெற தங்கள் இணைய பக்கங்களின் பெயர்களிலும் தங்களது இணைய புனைப் பெயர்களிலும் தமிழ், தமிழன் என்று இணத்துக் கொண்டு//

Note this POINT.

said...

APPEASEMENT means buying off the Aggressor by conniving at his acts of murder, rape, arson and loot against INNOCENT persons who happen to be the victims of his displeasure... the policy of concession has increased Muslim aggressiveness, and what is worse, Muslims interpret these concessions as a sign of DEFEATISM on the part of the Hindus and the ABSENCE of the Will to resist.

This policy of appeasement will involve the Hindus in the same fearful situation in which the Allies found themselves as a result of the policy of appeasement which they adopted towards HITLER. This is another Malaise, no less acute than the malaise of SOCIAL STAGNATION. Appeasement will surely aggravate it

போதிசத்வ பாபாசாஹேப் அம்பேத்கார்

said...

எ அ பாலா

இணையத்தில் உள்ள முஸ்லீம்களில் ஒருவர் கூட இங்கு வந்து அப்படிச் சொல்வது தவறு என்று ஏன் சொல்லவில்லை? அப்படியானால் அவர்கள் எல்லோருக்கும் இதில் மனப்பூர்வமாகச் சம்மதம் இந்துக்கள் அழிவதில் மகிழ்ச்சி என்றுதானே அர்த்தம்? இணையத்தில் எழுதும் படித்த முஸ்லீம்களின் எண்ணப் போக்கே இவ்வாறு இருந்தால் படிப்பில்லாத மதராசா முஸ்லீம்களின் வெறுப்பும் குரோதமும் எந்த அளவுக்கு இருக்கும்? தமிழ் இணையத்தில் எழுதும் ஒரு முஸ்லீம் ப்ளாகருக்குக் கூட இதைக் கண்டிக்க வேண்டும் என்று தோன்றாதது வெறும் தற்செயலாக இருக்க முடியாதுதானே?

தருமி said...

//இந்தியாவில் கடந்த நான்காண்டுகளில் நடந்த குண்டு வெடிப்புகளின் எண்ணிக்கை 25042. .....ஆராய்ச்சி பண்ணி உங்க "கண்டுபிடிப்பை" உலகுக்கு குடுங்க.//

இம்புட்டா? நெஜமாவா? எங்க இருந்து எடுத்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? மேலும் வாசிக்கத்தான் ...

ஷங்கர் Shankar said...

நன்றாக கூறினீர்கள்! இணையபக்கங்கள் தங்கள் கைகளில் இருக்கிறதென்று அவரவர் இஷ்டத்திற்கு எழுதுகிறார்கள். மதச்சார்பின்மை என்று கூறி ஒரு மதத்திற்கு ஆதரவாக பேசுவதே வேலையாக போய்விட்டது!

MUTHU said...

நெத்தி அடி

MUTHU said...

நெத்தி அடி

enRenRum-anbudan.BALA said...

புரொபஸர் சார்,

கி.அ.அ.அ. இந்த புள்ளி விவரத்தை எங்க்கிருந்து எடுத்தார் என்று தெரியவில்லை. ஆனால், எனக்கென்னவோ இத்தகவலை தினமலர் தளத்தில் பார்த்ததாக ஞாபகம். நன்றி.

said...

தருமி சார்

எ அ பாலா சொன்னது போல் தகவல் 1/12 தினமலரில் வந்ததுதான். சுட்டி கொடுத்துள்ளேன்
http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?news_id=6696&ncat=IN&archive=1&showfrom=12/01/2008

நன்றி

கி அ அ அனானி

said...

சீனு, முத்து, ஷங்கர் மற்றும் சக அனானிகளுக்கும் கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்

கி அ அ அனானி

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails